Wednesday, 15 August 2012

TIRUPURTNTJ: திக்கு முக்காட வைத்த திருப்பூர் விவாதம்

TIRUPURTNTJ: திக்கு முக்காட வைத்த திருப்பூர் விவாதம்மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் – காலேஜ் ரோடு கிளையில் ‎உள்ள டிஎன்டிஜே உறுப்பினர் ஒருவரிடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ ‎சகோதரர் ஆனந்தன் என்பவர்,
“இயேசுவைத்தான் நாம் ரட்சகராக ஏற்றுக் கொள்ள ‎வேண்டும். அவர்தான் நமது பாவங்களைப் போக்க தன்னையே ஒப்புக்கொடுத்தார்” ‎என்று கூறி தங்களது மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்துள்ளார். இந்த ‎செய்தியை மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்க, தலைமையில் நடைபெற்ற ஒரு மாதப் ‎பிரச்சாரகர் பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்த முஹம்மது யூசுப் அவர்கள் திருப்பூர் ‎மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிறித்தவ போதகருடன் விவாதம் செய்ய அந்தப் ‎பகுதிக்குச் சென்று ஆனந்தன் என்ற அந்த கிறித்தவ சகோதரரிடத்தில் சில ‎கேள்விகளைக் கேட்டுள்ளார்.‎
இயேசு இரட்சிக்க வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட கிறித்தவ போதகர் :‎

பேச்சைத்துவக்கியதுமே நமது தரப்பில் ஒரு கேள்வி அவரை நோக்கி ‎கேட்கப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியின் முதலாளி ஒரு நபரை கம்ப்யூட்டர் ‎ஆபரேட்டராக வேலைக்குச் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையை நீ செய்ய ‎வேண்டும் என்று அவரிடத்தில் பொறுப்புக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார். ஆனால் ‎அந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரோ தனது பணியின் முக்கியத்துவத்தை அறியாமல், ‎‎“முதலாளியே! முதலாளியே! ஏன் என்னை இந்த வேலைக்கு அனுப்பினீர்! என்னை ‎விட்டால் உனக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இந்த வேலையைக் கொடுத்து ஏன் ‎என்னை சோதிக்கின்றீர்? ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்பாரேயானால், அந்த ‎கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தனது வேலையை சரிவரச் செய்தார் என்று சொல்லலாமா? ‎அவருக்கு முதலாளி சம்பளம் கொடுப்பது சரியா?” என்ற ஒரு கேள்வியை ‎எழுப்பியுள்ளார்.‎

அதைக்கேட்ட கிறித்தவ போதகரோ, “அது எப்படி சரியாகும்? தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்யாமல், என்னை ஏன் இந்த வேலைக்கு அனுப்பி சோதிக்கின்றீர்? ‎என்று ஒருவர் கேட்பாரேயானால் அது ரொம்பத் தவறு. அவர் தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்தவராகமாட்டார். அவரே விரும்பி அந்த வேலையைச் ‎செய்தவராகமாட்டார்” என்று சொல்லியுள்ளார்.‎

அதற்கு நமது சகோதரர், “அப்படியானால், இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ‎அவர் நமக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தார். அவர் தன்னையே பலி கொடுத்தார் ‎என்று சொல்லுகின்றீர்களே! ஆனால் அவரோ தன்னை சிலுவையில் அறையும் போது, ‎‎”தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று அழுது புலம்பி கர்த்தரை ‎திட்டிக் கொண்டல்லவா உயிரை விட்டுள்ளார். இவராக விரும்பி மரணித்தார் என்று ‎எப்படி சொல்கின்றீர்கள்? இந்த பாத்திரத்திலிருந்து என்னை விடுவித்துவிடும் என்று ‎சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால் சாவுக்கேதுவான துக்கங்கொண்டு ‎புலம்பியவர்தான் ஏசு என்று பைபிள் கூறுகின்றது. அப்படியிருக்கையில் அவர் ‎நமக்காக பலியானார் என்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியவுடன், “பிரதர், நீங்க ‎ரொம்ப டீப்பா கிறித்தவத்தை ஆய்வு செய்துள்ளீர்கள். உங்களுக்கு என்னால் பதில் ‎சொல்ல முடியாது. கோயம்பத்தூரில் பெரிய போதகர்கள் குழு உள்ளது. அவர்களை ‎அழைத்து வருகின்றேன். அவர்களிடத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் ‎கேளுங்கள். அவர்கள் அனைத்திற்கும் பதில் சொல்வார்கள்” என்று ஆனந்தன் ‎கூறியவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதம்தான் திருப்பூர் கிறித்தவ விவாதம்.‎

இதன் பிறகு நமது சகோதரர்களை தொடர்பு கொண்ட கிறித்தவத்தரப்பினர், “நீங்கள் ‎ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு நடத்திய விவாதத்தையெல்லாம் நாங்கள் ‎பார்த்துவிட்டோம். எங்களிடம் வந்து கேள்வி கேட்டுப் பாருங்கள்; நாங்கள் எப்படி பதில் ‎சொல்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; நாங்கள் ஒன்றும் ‎ஜெர்ரிதாமஸ் போல உளறமாட்டோம்; அவரைப் போல திணற மாட்டோம். நீங்கள் ‎கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் நாங்கள் கிரிட்டிக்கலாக பதில் சொல்வோம்” என்று ‎கூறி அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற இடத்திலுள்ள கோஸ்பல் ‎தேவாலயத்திற்கு நம்மை அழைத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க இருபுறமும் ‎ஒப்பந்தக்கடிதம் பரிமாறப்பட்டது. அதையடுத்து கடந்த 16.07.2012 திங்கட்கிழமையன்று ‎அன்று விவாதம் காலை 11 மணிக்கு ஆரம்பமானது.‎

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ‎அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், அஹமத் கபீர், முஹம்மத் யூசுப், ‎சதாம்ஹுசைன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹுசைன், அலாவுதீன் ‎ஆகியோர் கலந்து கொண்டனர்.‎

கோஸ்பல் (நிளிஷிறிணிலி) சபையின் சார்பாக சகோ. சாலமன், ஆனந்தன், சகோ. ‎நாப்தலின் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டனர்.‎

சத்தியத்தைக் கண்டு அசத்தியவாதிகள் எப்படி சிங்கத்தைப் பார்த்து ‎வெருண்டோடக்கூடிய கழுதைகளைப் போல ஓடுவார்கள் என்பது இந்த விவாதத்திலும் ‎உண்மையானது. அவர்கள் கிரிட்டிக்கலாகக் கேட்ட கேள்விகளின் லட்சணம் என்ன? ‎வழக்கம்போல தவ்ஹீத் ஜமாஅத் குழுவினரிடத்தில் மாட்டிக் கொண்டு ‎எப்படியெல்லாம் விழிபிதுங்கித் த

No comments:

Post a Comment